Tuesday, November 10, 2020

GREATNESS OF KING MANU NEETHI CHOLAN (மனுநீதி சோழன்)

 There is the awesome story of the great Chola King  Manu Neethi Cholan (மனுநீதி  சோழன்) who kills his own son when  the latter unknowingly kills the calf of a cow by running  his chariot over the same. The cow rings the  Royal Bell and conveys its  boundless grief on loss of its beloved calf. Deeply moved, the King kills his own son in the same manner by which the calf is killed.  Lord Siva along with his consort Uma Devi appears  and blesses the righteous King and brings to life both the calf and the son of  Manu Neethi Cholan.

The Key verses as per Tiruttondar Puranam (திருத்தொண்டர்புராணம்) presenting this amazing episode showing the greatness of  Manu Neethi Cholan  are presented below:-

அலறுபே ராவை நோக்கி யாருயிர் பதைத்துச்   சோரும்;

நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த் திரங்கி    நிற்கும்;

மலர்தலை யுலகங் காக்கும் மனுவெனு மெங்கோ  மானுக்

குலகிலிப் பழிவந் தெய்தப் பிறந்தவா வொருவ  னென்பான்.

 

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியாதாகி

முன்னொருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்கண்ணீர் வார

மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற்கோயில் வாயிற்

பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற்புடைத்த தன்றே.

 

ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்

தருமந்தன் வழிச்செல்கை கட' னென்று   தன்மைந்தன்

மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்;

அருமந்த அரசாட்சி அரிதோ? மற் றெளிதோ?   தான்

 

தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு  தரியாது

மண்ணவர்கண் மழைபொழிந்தார்; வானவர் பூமழை பொழிந்தார்;

அண்ணலவன் கண்ணெதிரே யணிவீதி  மழவிடைமேல்

விண்ணவர்க டொழநின்றான் வீதிவிடங்கப்  பெருமான்.

 

அந்நிலையே யுயிர்பிரிந்த வான்கன்று மவ்வரசன்

மன்னுரிமைத் தனிக்கன்று மந்திரியு முடனெழலும்

இன்னபரி சானானென் றறிந்திலன்வேந்தனும்யார்க்கும்

முன்னவனே முன்னின்றான் முடியாத   பொருளுளதோ.

 

அடிபணிந்த திருமகனை யாகமுற வெடுத்தணைத்து

நெடிதுமகிழ்ந் தருந்துயர நீங்கினா னிலவேந்தன்;

மடிசுரந்து பொழிதீம்பால் வருங்கன்று  மகிழ்ந்துண்டு

படிநனைய வரும்பசுவும் பருவரனீங் கியதன்றே.

 

பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயி லமர்ந்தபிரான்

வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே யருள்கொடுத்துச்

சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்

கென்றுமெளி வரும்பெருமை யேழுலகு  மெடுத்தேத்தும்.

जय जय श्रीराधे